Wednesday, 17 March 2010

பசுபிக் கடலில் ஒரு 'குப்பைத் தீவு!'

பசுபிக் கடலில் ஒரு 'குப்பைத் தீவு' இருக்கின்றதென்றால் ஆச்சரியமாக இல்லையா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தருகே உள்ள பசுபிக் கடலில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தொன் குப்பைகள் சேர்ந்து ஒரு தீவாக உருவாகியுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
 அமெரிக்காவில் கலிபோர்னியாவுக்கும் ஹவாய் தீவுக்கும் இடையே உள்ள 
பசுபிக் கடலில் நீரின் சுழற்சி வேகம் அதிகம் உள்ளது. இதனால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள பொருட்கள் கூட இந்தப் பகுதிக்கு இழுத்து வரப்படுகின்றன.

கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த இடத்தில் குப்பைகள் சேரத் தொடங்கின. கடந்த 20 ஆண்டுகளில் குப்பைகளின் அளவு பல மடங்கு சேர்ந்து விட்டன.

பிரிட்டன் தீவை போல ஆறு மடங்கு அதிகமாக இங்கு குப்பைகள் சேர்ந்து விட்டன. பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள், தண்ணீர் போத்தல்கள், குளிர்பான டப்பாக்கள் என ஒரு தீவு அளவுக்கு குப்பைகள் சேர்ந்து விட்டன.

இந்தப் பகுதியில் வளரும் மீன்களின் வயிற்றில் குப்பைகளின் துகள்கள் உள்ளன. சமீபத்திய ஆய்வில் ஒரு மீனின் வயிற்றிலிருந்து 26 பிளாஸ்டிக் துண்டுகள் எடுக்கப்பட்டன.

இந்தத் தீவுக் கூட்டம் கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் கெடுதலை விளைவிக்கும் என சுற்றுசூழல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்களைச் சாப்பிடும் மீன்களை மனிதர்களும் சாப்பிட்டால் அதனால், உடல்நிலை பாதிப்பு உண்டாகும். எனவே, இந்தக் குப்பை தீவை என்னசெய்யலாம் என தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

சென். பிரான்சிஸ்கோ மற்றும் ஹொங்கொங்கைச் சேர்ந்த சுற்றுச் சூழல் வல்லுனர்கள், பசுபிக் கடலில் சேர்ந்துள்ள குப்பைகளைக் கப்பல்களில் எடுத்து வந்து எரிசக்தி பொருளாக மாற்றலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ரிச்சர்ட் பெயின் குறிப்பிடுகையில்,

"சுற்றுச் சூழலால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இந்தத் தீவை உதாரணமாகக் காட்டலாம்" என்கிறார்.

பிரிட்டனின் பரப்பு 94 ஆயிரத்து 525 சதுர மைல்கள். ஆனால், பசுபிக் கடலில் சேர்ந்துள்ள குப்பைகளின் அளவு ஐந்து லட்சத்து 40 ஆயிரம் சதுர மைல்கள். இந்தப் பகுதியில் கடல் தண்ணீரும் ரசாயனமாக மாறியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

Monday, 15 March 2010

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு


  ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை
ஆராய்ந்த பேராசிரியர் சவால் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும். ஜோதிடம் என்பது அறிவியல் ரீதியில் மூட நம்பிக்கையே. அது இந்தி-யாவில் வேத நூல்களிலோ, மகாபாரதம், ராமாயணம், உபநிஷத்துகள் போன்ற-வற்றிலோ அது பற்றிய சிறுகுறிப்புகள் கூட இடம் பெறவில்லை. ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை. ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க - ரோமானிய கலாச்சாரத்தி-லிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும். பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள். இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கை-யுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. ஜோதிடர்-களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம். தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே ஜோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள். தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் ஜோதிடரி-டம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள். பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு ஜோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது ஜோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் ஜோதி-டத்தைக் கற்றிருப்பவர். இந்த ஜோதி-டம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி ஜோதிடத்திற்குப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, ஜோதிடம், ஆன்மா, மறு-பிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளி-நாட்டு கடவுள்கள் உள்பட அனைத்-துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னடமொழியில் பல நூல்களை எழுதியுள்ளார். முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மையென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார். ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வர-வில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள். எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு: சவாலை ஏற்று வரும் ஜோதி-டரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்-பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்-காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும். ஜோதிடம் என்பதே எதிர்-காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் ஜோதிடரோ, மந்திர-வாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும். ஜோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார். ராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் ஜோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை ஜோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார். ஜோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல ஜோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்-துள்ளார். ஜோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலஜோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்-படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். ஜோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்-ஞானத்திற்கு எதிரானது என்று அறிந் தார். ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப்பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது அவர் பங்குச் சந்தை ஆலோசகராக உள்ளார்மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை-படுகொலை செய்வதற்கு ஒப்பானது ஜோதிடம். மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்-கியத்தனம் என்கிறார். இயற்கைவாதி செ. கஜபதி

டைனசோர்கள்

இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனசோர்களை விட 10 மில்லியன் ஆண்டுகள் பழமையான விலங்கினங்களின் எலும்புகளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


அசிலிசரஸ் கொங்குவி (Asilisaurus kongwe) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விலங்கினங்கள் 245 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


இவர்களின் கண்டுபிடிப்புகள் நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஸ்டேர்லிங் நெஸ்பிட் என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


தான்சானியாவில் இந்த புதைபடிவ எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


"சைலசோர் (silesaurs) எனப்படும் இவ்வகை விலங்கினங்கள் டைனசோர்களின் மிக நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த அவற்றின் மூதாதைகள்," என இவ்வாய்வில் பங்குகொண்ட முனைவர் ரண்டல் ஏர்மிஸ் என்பவர் தெரிவித்தார்.


டைனோசர் பரம்பரையின் ஆரம்பக்கட்டங்கள் குறித்து மீள ஆய்வுநடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்த புதிய கண்டுபடிப்புகள் தம்மை தள்ளியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


"டைனசோர் பரம்பரையின் ஒரு கிளையை மட்டுமே இப்போது கண்டுபிடித்துள்ளோம். இரண்டாவது கிளையும் இதே காலப்பகுதியில் இருந்திருக்க வேண்டும். எனவே இப்பரம்பரையில் ஆரம்பகால டைனசோர்கள் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது" என ஏர்மிஸ் தெரிவித்தார்.

in reference to:

"கொண்டு வந்தது எனலாம். இது பூமியில் மனித இனம் பெருக வழிவகுத்துள்ளது", இவ்வாறு தெரிவித்தார் கரெத் எவன்ஸ்."
- CURRENT NEWS: டைனசோர்கள் (view on Google Sidewiki)

டைனசோர்கள்

டைனசோர்களை பூமியில் இருந்து முற்றாக அழித்தது பூமியைத் தாக்கிய ஒரு சிறுகோள் தான் என்று உலக நாடுகளின் புகழ்பெற்ற அறிவியலாளர்கள் ஒன்று சேர்ந்து அறிவித்திருக்கிறார்கள்.



பூமியில் சிறுகோளின் தாக்கம் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியிலிருந்த உயிரினங்களின் கிட்டத்தட்ட அரைவாசி அளவை முற்றாக அழித்த நிகழ்வு குறித்து கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஆய்வுகளை அடிப்படையாக வைத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கக்கூடிய 41 அறிவியலாளர்கள் ஒன்று சேர்ந்து இந்த முடிவை அறிவித்திருக்கிறார்கள்.


இந்த அழிவை ஏற்படுத்தியது சிறுகோளா அல்லது தற்போதைய இந்தியாவின் தக்காணப் பீடபூமியில் 1.5 மில்லியன் ஆண்டு காலமாக இடம்பெற்று வந்ததாகக் கருதப்படும் ஏற்பட்ட எரிமலைச் சீற்றம் (தக்காணத்துப் பெருங்குழி) போன்ற இயற்கை அழிவுகளா என்பதில் இதுவரையில் அறிவியலாளர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.


ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் "சயன்ஸ்" சஞ்சிகையில் இது குறித்து தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். இதன்படி, 15 கிமீ அகலமான சிறுகோள் ஒன்று பூமியை சிக்களப் பெருங்குழி (Chicxulub crater) என்ற (இப்போதைய மெக்சிக்கோவின்) பகுதியைத் தாக்கியதில் இவ்வுயிரினங்கள் அழிந்திருக்கின்றன.


ஹிரோசிமாவில் போடப்பட்ட அணுகுண்டை விட பில்லியன் மடங்கு வேகமாக இந்தச் சிறுகோள் பூமியைத் தாக்கியிருக்கிறது.

—ஜொவான்னா மோர்கன், இம்பீரியல் கல்லூரி, லண்டன்



"இம்மோதுகையால் பூமியில் 10 ரிக்டர் அளவை விட மோசமான நிலநடுக்கங்கள், பெரும் தீ, நிலச்சரிவுகள், ஆழிப்பேரலை போன்றவை இடம்பெற்றிருக்கின்றன," என லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஜொவான்னா மோர்கன் தெரிவித்தார்..





ஹிரோசிமாவில் போடப்பட்ட அணுகுண்டை விட பில்லியன் மடங்கு வேகமாக இந்தச் சிறுகோள் பூமியைத் தாக்கியிருக்கிறது.
"சிறுகோளின் தாக்கம் டைனசோர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தாலும், பாலூட்டிகளுக்கு அது ஒரு "பெரும் நாளாக"க் கருதலாம்,' என இவ்வாய்வுகளில் பங்கெடுத்த கரெத் எவன்ஸ் தெரிவித்தார்.
"டைனசோர்களின் முடிவு பூமியின் வரலாற்றுக்கு ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது எனலாம். இது பூமியில் மனித இனம் பெருக வழிவகுத்துள்ளது", இவ்வாறு தெரிவித்தார் கரெத் எவன்ஸ்.

Saturday, 13 March 2010

அனைத்தும் பொய் - நித்தியானந்தர்

என் மீதும், எனது ஆச்சிரமங்கள் மீதும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என தெரிவித்துள்ளார் நித்தியானந்தர். அவர் தற்போது கும்பமேளாவில் கலந்து கொண்டிருப்பதாக அவரது ஊழியர்கள் தெரிவித்தனர். அமெரிக்கா ஆய்வாளர் ஒருவருக்கு நித்தியானந்தர் அளித்த பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியதாக அறிய முடிகிறது.
மேலும் என்னிடம் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் எனது பக்தர்கள் எனக்கு வழங்கிய அன்பு பரிசில்கள். அவர்கள் போதனைகளால் பலன் பெற்றவர்கள் . அவை அனைத்திற்கும் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆச்சிரமத்தில் தங்கி இருப்பவர்கள் சுய விருப்பத்துடனே உள்ளனர். அவர்களை நாங்கள் கட்டாயப் படுத்தி தங்க வைக்கவில்லை எனவும்.
பீடத்தினுள் கிடைத்த சந்தனக்கட்டைகள் திருடர்கள் விட்டுச்சென்றவை. எல்லாவற்றுக்கும் சட்டப்படி ஆவணம் உண்டு. எதையும் நாங்கள் சட்ட விரோதமாக செய்யவில்லை . ஏன் மீடியாக்கள் தமக்கு எதிராக செயற்பட தொடங்கின என்பது தெரியவில்லை இதில் பிண்ணனியில் யார் இருக்குறார்கள் என்பதை ஆதாரம் இல்லாமல் நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை எனவும் நித்தியானந்தர் கூறியுள்ளார். ஆயினும் வீடியோ விவகாரம் பற்றி நித்தியானந்தர் எதுவும் கூறவில்லை எனவும் அறிய முடிகிறது.
Related Posts with Thumbnails